சென்னை ஐகோர்ட்டுக்கு 2 நீதிபதிகள் மாற்றம்; ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த நீதிபதி பாட்னாவுக்கு மாற்றம்: உச்ச நீதிமன்ற கொலீஜியம் அதிரடி

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அலகாபாத் மற்றும் தெலங்கானா உயர் நீதிமன்றத்திலிருந்து 2 நீதிபதிகளை மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஒதுக்கீடு 75 பேரில் தற்போது 63 நீதிபதிகள் உள்ளனர். இந்த நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி வினீத் குமார் சிங், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 65 ஆக உயரவுள்ளது.

ஏற்கனவே, உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்த 4 பேரின் பெயர்கள் இன்னும் ஒன்றிய அரசால் ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில் வேறு நீதிமன்ற நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பது வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கிடையே, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைக்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரசாக்கை பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. குஜராத் உயர் நீதிமன்றத்திலிருந்து வேறு நீதிமன்றங்களுக்கு 4 நீதிபதிகள் மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருப்பதும் வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related posts

கூட்டம் சேராததால் மறுக்கா மறுக்கா சுற்றுப்பயணத்துக்கு திட்டமிடும் சின்ன மம்மி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலி