அதிமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட அறப்போர் இயக்கம் மீதான 2 வழக்கு ரத்து

சென்னை: சென்னை திருமங்கலம் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டபோது அங்கு வந்த அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் மிரட்டல் விடுத்ததாக, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படும் ஒப்பந்ததாரரான கான்ஸ்டிரானிக்ஸ் இந்தியா விஷ்ணுவர்தன் அளித்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் காவல் நிலையத்தில் அறப்போர் இயக்கம் மீது கடந்த பிப்ரவரி 2019ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதேபோல, சென்னை பெரம்பூர் அகரம் அருகே கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் உங்கள் உரிமையை தெரிந்து கொள்ளுங்கள் என்ற பெயரில் இலவச பயிற்சி முகாமை நடத்துவதாக கூறி மக்களை ஏமாற்றியதாக பெரவள்ளூர் போலீசார் அறப்போர் இயக்கம் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, அரசியல் உள்நோக்கத்துடன் பதியப்பட்ட இந்த இரு பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று அறப்போர் இயக்கம் சார்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, அறப்போர் இயக்கத்துக்கு எதிரான 2 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related posts

விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது: அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

தரகம்பட்டி அருகே கூனமநாயக்கனூரில் பாரம்பரிய மாடு மாலை தாண்டும் திருவிழா

நொய்டாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து!!