பைக் திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் சிக்கினர்

பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் கிழக்கு அவன்யூ ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கரண் (27). இவர் மெட்ரோ குடிநீர் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை 5 மணிக்கு முத்தமிழ் நகர், பவானி அம்மன் கோயில் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றபோது 2 சிறுவர்கள் கரணின் பைக்கை திருட முயற்சி செய்துள்ளனர். அப்போது கரண் ஓடிவந்து ஒரு சிறுவனைப் பிடித்து கொடுங்கையூர் குற்றப் பிரிவில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட சிறுவன் சென்னை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த மற்றொரு 16 வயது சிறுவனுடன் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து தப்பி ஓடிய 16 வயது சிறுவனையும் போலீசார் நேற்று பிடித்தனர். இவர்கள் இருவரும் செலவுக்காக பைக்குகளை திருடியது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து 2 சிறுவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் அவர்களை கெல்லிசில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

Related posts

உழவு செய்தபோது தந்தை கண்முன் டிராக்டரில் சிக்கி மகன் நசுங்கி பலி

இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேசத்தினர் 11 பேர் கைது

நீட் தேர்வு முறைகேடு வழக்கு குஜராத் பள்ளி உரிமையாளரை கைது செய்தது சிபிஐ