28 முறை கைது செய்யப்பட்ட ஹாலிவுட் வில்லன் நடிகர் மரணம்

நியூயார்க்: பிரபல ஹாலிவுட் வில்லன் நடிகர் டோனி சிரிகோ (79), திரைக்கு வந்த ‘குட்ஃபெல்லாஸ்’,  ‘மோப் குயின்’,  ‘லவ் அன்ட் மணி’, ‘பிங்கர்ஸ்’, ‘த ஒன் மேன் ஜூரி’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 1974ல் ‘கிரேசி ஜோ’ என்ற படத்தில் அறிமுகமான அவர், கடைசியாக 2017ல் வெளியான ‘வொண்டர்புல் வீல்’ என்ற படத்தில் நடித்திருந்தார். பெரும்பாலும் வில்லன் மற்றும் கேங்ஸ்டராகவே நடித்துள்ளார். ’த சோப்ரானோஸ்’ என்ற வெப்தொடரில் பாலி வால்னெட் என்ற கொடூரமான கேங்ஸ்டராக நடித்து  இருந்தார். டோனி சிரிகா நடிக்க வருவதற்கு முன்பு நிஜத்தில் வில்லனாகவும் இருந்தார். மிரட்டி பணம் பறித்தல், கொடூரமான ஆயுதங்களை வைத்திருத்தல் போன்ற குற்றங்களுக்காக 28 முறை கைது செய்யப்பட்டு, 20 மாதங்கள் வரை சிறையில் இருந்துள்ளார். நியூயார்க்கில் தனது மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்த டோனி சிரிகோ, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்….

Related posts

சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்களின் ஒற்றுமையே புதிய தொடக்கத்தின் அடித்தளம் : இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசநாயக உரை!!

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றுவிட்டால் இதுவே என் கடைசி தேர்தல்: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!!

இலங்கையின் புதிய அதிபராக இன்று பதவியேற்கிறார் அநுர குமார திசநாயக!