26 மாதத்துக்கு பின் ரியூனியன் – சென்னை விமான சேவை

சென்னை: ரீ யூனியன் தீவின் தலைநகரான செயின்ட் டெனிஸ் – சென்னை விமான சேவை 26 மாதத்துக்கு பின்பு நேற்று தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டு விமானங்கள் ரத்தானது. அதில் முக்கியமானது சர்வதேச சுற்றுலாத்தலமான ரீ யூனியன் என்ற குட்டி தீவின் தலைநகர் செயின்ட் டெனிஸ் என்ற இடத்திலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஏர்ஆஸ்ட்ரல் விமானம். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இருபத்தி 6 மாதங்களாக இந்த விமான சேவை ரத்தாகி இருந்தது. சகஜநிலைக்கு திரும்பியதால் மீண்டும் விமான சேவை யை தொடங்க ஏர்ஆஸ்ட்ரல் விமான நிறுவனம் விரும்பியது. இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகமும் அதற்கு அனுமதி அளித்தது. அதன் பேரில் 26 மாதங்களுக்கு பின்பு, முதல் விமானம் நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு 47 பயணிகள், 6 விமான ஊழியர்களுடன் செயின்ட் டெனிஸிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதற்கு ஓடுபாதையின் இரு பகுதியிலும், 2 தீயணைப்பு வண்டிகள் நின்று தண்ணீரை பீய்ச்சி அடித்து, ‘வாட்டர் சல்யூட்’ கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை