26 மரங்கள் வெட்டி விற்பனை: அரசு கல்லூரி முதல்வருக்கு ரூ.2.18 லட்சம் அபராதம்

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர்கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சுமார் 30 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட இக்கல்லூரி வளாகத்தில், அதிக மரங்கள் உள்ளன. கடந்த அக்டோபர் மாதம், கல்லூரி வளாகத்தில் இருந்த பெரிய மரங்களை வெட்டி, விற்பனை செய்ததாக கல்லூரி மாணவர்கள் தரப்பில், வருவாய் துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நடந்த விசாரணையில் 19 மரங்கள் முழுமையாகவும், 7 மரங்களின் கிளைகளையும் வெட்டி, விற்பனை செய்தது தெரியவந்தது. அரசு அனுமதியின்றி, கல்லூரி முதல்வர் பங்காரு உத்தரவின் பேரில், 17 டன் எடை கொண்ட இந்த மரங்கள் வெட்டப்பட்டு, வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது என விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வனத்துறையும் அறிக்கை வெளியிட்டிருந்தது.இதனிடையே, வனத்துறை அறிக்கையினை ஆய்வு செய்த நாமக்கல் ஆர்டிஓ மஞ்சுளா, கல்லூரி வளாகத்தில் புதியதாக 190 மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதுடன், வெட்டப்பட்ட மரங்களின் விலை மதிப்புக்கு ஈடாக 5 மடங்கு அபராத தொகையாக மொத்தம் ரூ.2,18,645 அபராதத்தை கல்லூரி முதல்வர் கட்ட வேண்டும். இதனை தாசில்தார் வசூலித்து, அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், கல்லூரி முதல்வர் பங்காரு மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள, கல்லூரிகளின் மண்டல இணை இயக்குனருக்கு அறிக்கை அனுப்பினார்….

Related posts

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு