26 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல்

நாமக்கல், மே 16: நாமக்கல்லில் நடைபெற்ற இடமாறுதல் ஆன்லைன் கலந்தாய்வில், 26 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரும்பிய பள்ளிகளை தேர்வு செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்டத்துக்குள் இடமாறுதல் அளிக்க ஆன்லைன் கலந்தாய்வு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையில் நேற்று நடைபெற்றது. மூத்த தலைமை ஆசிரியர் வடிவழகன் தலைமையிலான கல்வித்துறை அலுவலர்கள் கலந்தாய்வை நடத்தினர். இந்த கலந்தாய்வில், மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் பணியாற்றும் 30 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில், மாவட்டத்தில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள 26 பள்ளிகளும், ஒளிவு மறைவின்றி ஆன்லைனில் காட்டப்பட்டது. இதையடுத்து, கலந்தாய்வில் பங்கேற்ற தலைமை ஆசிரியர்கள், தங்களுக்கு விருப்பமான பள்ளிகளை தேர்வு செய்து இடமாறுதல் பெற்றுக் கொண்டனர். வரும் 31ம் தேதி, தலைமை ஆசிரியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் பள்ளிகளான வளையப்பட்டி, எருமப்பட்டி ஆண்கள் உள்ளிட்ட பள்ளிகளும் காட்டப்பட்டது.

புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன், அத்தனூர் அரசு பள்ளிக்கும், ஆர்.புதுப்பாளையம் தலைமை ஆசிரியர் ஆன்ட்ருஸ், என்.புதுப்பட்டிக்கும், கபிலர்மலை மெஹருன்னிசா, பாலப்பட்டிக்கும், குமாரபாளையம் பெண்கள் பள்ளி சிவகாமி, நாமக்கல் அரசு பெண்கள் பள்ளிக்கும், திருச்செங்கோடு பெண்கள் பள்ளி அரங்கநாயகி, இறையமங்கலத்துக்கும் மாறுதல் பெற்றனர். அதேபோல், ஜேடர்பாளையம் பழனிசாமி கபிலர்மலைக்கும், ராசிபுரம் அண்ணாசாலை மாதேஸ்வரன் பெரியமணலிக்கும், சித்தாளந்தூர் சாந்தாமணி வையப்பமலைக்கும், ராமாபுரம் கலையரசன் வேலகவுண்டம்பட்டிக்கும், உலகப்பபாளையம் பாஸ்கரன் விட்டம்பாளைத்துக்கும் இடமாறுதல் பெற்றனர்.

பள்ளிபாளையம் அரசு ஆண்கள் பள்ளி கருப்பண்ணன் உலகப்பாளையத்துக்கும், காளப்பநாய்க்கன்பட்டி அரசு ஆண்கள் பள்ளி புஸ்பராஜ் வரகூருக்கும், கொக்கராயன்பேட்டை ராஜமாணிக்கம் ஜேடர்பாளையத்துக்கும், மாணிக்கம்பாளையம் பார்த்திபன் சேந்தமங்கலம் அரசு ஆண்கள் பள்ளிக்கும், முத்துக்காப்பட்டி ராஜேந்திரன் காவக்காரப்பட்டிக்கும், மல்லசமுத்திரம் மகளிர் பள்ளி லதா சித்தாளந்தூருக்கும், வெண்ணந்தூர் ஆண்கள் பள்ளி மகேஷ்குமார் வளையப்பட்டிக்கும், நாமகிரிப்பேட்டை மகளிர் பள்ளி செண்பகவள்ளி சிங்களாந்தபுரத்துக்கும், பாப்பம்பாளையம் சிவா ராமாபுரம் மாதிரி பள்ளிக்கும், மங்களபுரம் விஜயகுமாரி ஆர்.புதுப்பாளையத்துக்கும் ஆன்லைன் மூலம் இடமாறுதல் பெற்றுள்ளனர்.

ராமாபுரம் மாதிரி பள்ளி இமயதாண்டவபூபதி புதுச்சத்திரத்துக்கும், பேளுக்குறிச்சி தமிழ்செல்வன் எருமப்பட்டி அரசு ஆண்கள் பள்ளிக்கும், திருச்செங்கோடு ஆண்கள் பள்ளி ராஜா காளப்பநாய்க்கன்பட்டிக்கும், அரியூர் புதுவளவு இளங்கோவன் முத்துக்காப்பட்டிக்கும், பரமத்தி ஆண்கள் பள்ளி சண்முகம் சோழசிராமணிக்கும், தேவனாங்குறிச்சி பாலசுப்பிரமணியம் திருச்செங்கோடு அரசு ஆண்கள் பள்ளிக்கும் இடமாறுதல் பெற்றுள்ளனர். வரும் 1ம் தேதி அனைவரும் புதிய பணியிடத்தில் சேரும்படி, முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளார். இன்று(16ம் தேதி) வெளி மாவட்டத்துக்கு மாறுதல் செல்லும் தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்