வரும் 25,26ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

சென்னை: வரும் 25, 26ம் தேதி என மதுபான கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: வடலூர் ராமலிங்கர் நினைவு நாளான வரும் 25ம் தேதி (வியாழக்கிழமை) மற்றும் குடியரசு தினமான வரும் 26ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல்1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்எல்3 உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்எல்3(ஏ), எப்எல்3(ஏஏ) மற்றும் எப்எல்11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு