25 நாட்களுக்கு வெயில் வாட்டும் அக்னி நட்சத்திர காலம் தொடங்கியது

சென்னை: அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. இந்த வெயில் காலம் 25 நாட்களுக்கு தமிழகத்தில் நீடிக்கும். தமிழகத்தில் தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்து எங்கும் வெப்பம் தகித்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாக இடையிடையே வளி மண்டல காற்று  சுழற்சியும் ஏற்பட்டு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக மலைப் பிரதேசங்களான மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.  நேற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில இடங்களிலும், விழுப்புரம் மாவட்டத்தில் சில இடங்களிலும் மழை பெய்தது.  இருப்பினும் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சராசரியாக 100 முதல் 102 டிகிரி வரை நீடிக்கிறது. இதனால் இரவு  நேரங்களில் வெக்கை மற்றும் புழுக்கம் போன்ற பிரச்னைகளில் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் தொடங்கும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. வரும் 28ம் தேதி வரை இந்த கத்திரி வெயில் காலம் தமிழகத்தில் நீடிக்கும். அதாவது 25 நாட்்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும். கத்திரி வெயில் காலத்தில் பொதுவாக தமிழகத்தில் வெயில் என்பது 110 அல்லது 111 டிகிரி வரை  அதிகரிப்பதுண்டு. இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்