25 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு பாதாள சாக்கடை அமைக்க பூமிபூஜை

மதுரை, ஜன. 1: மதுரை, மாநகராட்சியின் மேல அனுப்பானடி பகுதியில் 25 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பாதாள சாக்கடை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது. மதுரை மாநகராட்சியின் மேல அனுப்பானடி ஹவுசிங்போர்டு காலனியில், சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பாதாள சாக்கடைக்கான பிரதான குழாய் கடந்த 25 ஆண்டுகளாக அமைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்குவது தொடர்கதையாகி வந்தது.

இதுகுறித்து வார்டு கவுன்சிலர் காளிதாஸிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திமுக தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் சேடபட்டி மணிமாறன் பரிந்துரைத்தார். இதையடுத்து கவுன்சிலர் காளிதாஸ் தனது உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் பாதாள சாக்கடைக்கான பிரதான குழாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதையடுத்து குழாய் அமைப்பதற்கான பணிகளை தொடங்குவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் இப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தகாரர் செந்தூரான், திமுக பிரமுகர்கள் தியாகராஜன், செந்தில், காளிமுத்து, முனியசாமி, காளிராஜா மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பொதுக்கூட்டம்

பள்ளி மாணவி மாயம்

கம்பத்தில் நகர் மன்ற கூட்டம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்