24 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாரவிடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் அதிகளவு பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அப்போது தரிசனத்திற்கு பல மணி நேரம் ஆகிறது. நேற்றுமுன்தினம் சுவாமியை தரிசிக்க 18 மணி நேரம் ஆன நிலையில் நேற்று 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. நேற்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இந்நிலையில், ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

Related posts

அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு..!!

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா: அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு

பூக்களின் வரத்து அதிகரிப்பு மற்றும் விசேஷ நாள் இல்லாத காரணத்தால் மதுரையில் மல்லிகை பூ விலை சரிவு..!!