24 மணி நேரமும் டெல்லியில் ஜாலி: 300 கடைகள், மால்களுக்கு அனுமதி

புது டெல்லி: டெல்லியில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கி துணை நிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் டெலிவரி கடைகள், உணவகங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு 24 மணிநேரமும் செயல்பட ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். இதற்காக 314 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 300க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,’ என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “ஆளுநர் அனுமதி அளித்ததை தொடர்ந்து, அடுத்த வாரம் முதல், 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படும்,’ என்றனர். இவற்றில் மால்கள், ஓட்டல்கள் போன்றவையும் இடம் பெற்றுள்ளன….

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்

திருப்பதியில் வேதமந்திரங்கள் முழங்க ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது