24 பேர் காயம் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு திருச்சியில் 1674 பேர் தேர்வு எழுதினர்

 

திருச்சி, பிப்.5: திருச்சி மாவட்டத்தில் நேற்று பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வினை ஆறு தேர்வு மையங்களில் மொத்தம் 1674 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 62 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தமிழ்நாட்டில் அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பிற துறை பள்ளிகளில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 130 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி, ஹோலி கிராஸ் பெண்கள் பள்ளி, தேசிய கல்லூரி, அண்ணாசாலை இஆர் மேல்நிலைப்பள்ளி, கன்டோன்மென்ட் ஆர்சி மேல்நிலைப்பள்ளி, ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் 1736 பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இதில் நேற்று 1674 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 62 பேர் தேர்வு எழுத வரவில்லை. பாடவாரியாக தமிழ்-278, ஆங்கிலம்- 343, கணிதம்-705, இயற்பியல்- 116, வேதியியல்- 125, தாவரவியல்-17, விலங்கியல்-7, வரலாறு-72, புவியியல்-6 பேர் எழுதினர். தேர்வு மையங்களுக்கு காலை 7 மணிக்கே வந்த தேர்வர்கள் காலை 8.30 மணி முதல் கடும் சோதனைக்கு பின்னர் 9.30 மணிக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கையடக்க கணினி, மடிக்கணினி, கணக்கிடும் கருவிகள் போன்றவை அனுமதிக்கப்படவில்லை. தேர்வு நடைபெறும் அனைத்து அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, ஆசிரியா் தேர்வு வாரியத்தின் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டது. தேர்வுக் கூடத்தின் நுழைவுச் சீட்டு இல்லாமல் வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி