24வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிப்பு எதிரொலி: அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தொடர்ந்து 24வது மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே, கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். மேலும், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைக்க முக்தித் தரும் திருத்தலமாகவும் அமைந்திருக்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். குறிப்பாக, தீபத்திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமி நாட்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். ஆனால், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதல் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், இதுவரை கிரிவலத்துக்கான தடை மட்டும் நீங்கவில்லை.கடந்த மாதம் நவம்பர் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, கோர்ட் உத்தரவின்பேரில் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, தடை நீங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கிரிவலத்துக்கு இந்த மாதமும் தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி 24வது மாதமாக தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், தொற்று பரவல் இன்னும் முழுமையாக குறையாத நிலையில், கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.இந்நிலையில், தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த ேநரம் ேநற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு தொடங்கி, நேற்று இரவு 11.30 மணிக்கு நிறைவடைந்தது. எனவே, நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல முயன்றனர். ஆனால், கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து, கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும், கிரிவலப்பாதை வழியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். அதனால், கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால், அண்ணாமலையார் கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டனர். எனவே, ராஜகோபுரம் நுழைவு வாயிலை கடந்து வெளி பிரகாரம் வரை வரிசை நீண்டிருந்தது. சுமார் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கிரிவலம் செல்ல முடியாத பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டதால், கோயிலில் கூட்டம் அலைமோதியது. பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் ராஜ கோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். வழக்கம் போல, அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் ஒருசில பக்தர்கள் போலீஸ் தடுப்புகள் அமைந்த பகுதிக்கு அருகில் உள்ள மாற்றுப்பாதையை பயன்படுத்தி கிரிவலம் சென்றனர்.ரஷ்ய நாட்டு மக்களின் பக்திதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த ரஷ்ய நாட்டு மக்கள், தல விருட்சமான மகிழ மரத்தில் பக்தர்கள் வேண்டுதலுக்காக கட்டியிருந்த தொட்டில், ராஜெயம் என்று எழுதிய காகிதங்கள், மஞ்சள் துணியால் சுற்றப்பட்ட காணிக்கை காசு உள்ளிட்டவற்றை பார்த்தனர். தொடர்ந்து அங்கிருந்த சுற்றுலா வழிகாட்டியிடம் இதுகுறித்து கேட்டனர். அப்போது பக்தர்களின் வேண்டுதலுக்காக கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதையடுத்து ரஷ்ய நாட்டு பக்தர்கள் அண்ணாமலையாரை வேண்டிக்கொண்டு, வேண்டுதல் அடங்கிய துணியை மரத்தில் கட்டினர்….

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!