23 பேருக்கு மத மாற்ற திருமணம் உபி அரசு அனுமதி மறுப்பு

பரெய்லி: உபி மாநிலம் பரெய்லியை சேர்ந்தவர் மவுலானா தவ்கீர் ரஸா கான். இதிஹாத் இ மில்லத் கவுன்சில் தலைவரான தவ்கீர் கான், 15 இந்து பெண்கள் மற்றும் 6 ஆண்களை முஸ்லிம்களாக மதம் மாற்றி முறைப்படி திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சிக்கு வரும் 21ம் தேதி ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பல இந்து அமைப்புகள் இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என கோரிக்கை விடுத்தன. இதையடுத்து மத மாற்றம் மற்றும் திருமண நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது.

இது குறித்து இதிஹாத் மில்லத் கவுன்சில் தலைவர் தவ்கீர் கூறும்போது,‘‘நாங்கள் சட்டப்படி இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியிருந்தோம். மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை. இதையடுத்து நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. அரசின் அனுமதி இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடத்தப்படாது’’ என்றார். மாவட்ட கலெக்டர் கூறுகையில்,‘‘ பெண்களுக்கு மதமாற்றம் மற்றும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து வைக்க மில்லத் கவுன்சிலிடம் இருந்து கோரிக்கை வந்தது. இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை’’ என்றார்.

Related posts

22 ஆண்டுகளுக்குப் பின் செப்டம்பர் மாதத்தில் சென்னையில் அதிகபட்ச வெயில் பதிவு: தனியார் வானிலை ஆய்வாளர் பேட்டி

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர ஹோமம்

மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு