தனியார், அரசுசாரா நிறுவனங்களுடன் இணைந்து மேலும் 23 சைனிக் பள்ளிகள் புதிதாக திறப்பு

புதுடெல்லி: தனியார், அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து மேலும் 23 சைனிக் பள்ளிகளை அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு பள்ளி அமைப்புகளில் ஒன்றான சைனிக் பள்ளிகள் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் சைனிக் பள்ளிகள் சங்கம் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. மாணவர்களை இந்திய ராணுவத்தில் சேர்ப்பதை முக்கிய நோக்கமாக கொண்டு, கடந்த 1961ம் ஆண்டு பிரதமர் நேருவின் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த வி.கே.கிருஷ்ண மேனனால் திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டது.

இதன்ஒரு பகுதியாக அரசு சாரா நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், மாநில அரசுகளுடன் இணைந்து 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த முன்முயற்சியின்கீழ் நாடு முழுவதுமுள்ள 19 சைனிக் பள்ளிகளுடன் சைனிக் பள்ளிகள் சங்கத்தால் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய சைனிக் பள்ளிகள் திறப்பது தொடர்பான விண்ணப்பங்களை ஆய்வு செய்து, மேலும் 23 சைனிக் பள்ளிகளை திறக்க ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் தனியார், அரசுசாரா நிறுவனங்களுடன் இணை்நது நடத்தப்படும் சைனிக் பள்ளிகளின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது.

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்