‘22யார்ட்ஸ்’ பயிற்சி முகாம்: அஷ்வின் உற்சாகம்

சென்னை: இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் ‘22யார்ட்ஸ்’ கோடைகால பயிற்சி முகாம் சென்னையில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இது குறித்து நட்சத்திர வீரர் ஆர்.அஷ்வின் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் ஜென் நெக்ஸ்ட் குழு, சென்னையை சேர்ந்த 22யார்ட்ஸ் அமைப்புடன் இணைந்து கோடைகால பயிற்சி முகாமை நடத்த இருக்கிறோம். இந்த பயிற்சி முகாம் வெளிநாட்டினர் நிதி உதவியுடன் ஏப்.14ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் ஆர்வமுள்ள இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்த உதவி செய்வோம். பயிற்சி முகாம்கள் தரமான பயிற்சி கட்டமைப்புகளுடன் துரைப்பாக்கம், அடையாறு, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் நடக்கும். சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் இதர பகுதிகளிலும் பயிற்சி முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

வெளி மாவட்ட இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட அதிக ஆர்வம் காட்டுகின்றனர். நடராஜன் போன்ற ஏராளமான திறமையானவர்கள் அங்கிருந்து வருகின்றனர். தமிழகத்தில் கிரிக்கெட் விளையாட்டை வளர்க்க பல்வேறு திட்டங்களை ‘22யார்ட்ஸ்’ உடன் இணைந்து செயல்படுத்த உள்ளோம். அதன் ஒரு பகுதியாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை புதன்கிழமை (இன்று) சந்தித்து பேச உள்ளோம். இவ்வாறு அஷ்வின் கூறினார். தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்க, பதிவு செய்ய, மேலும் விவரங்கள் அறிய 87544 63228 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதற்காக ‘22யார்ட்ஸ் ஸ்கோரிங் ஆப்’ என்ற செயலியையும் ‘பிளே ஸ்டோரில்’ இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்