21 ஆயிரம் ஏக்கரில் பணிகள் தீவிரம்: திருவாரூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு

திருவாரூர், மே 4: திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியினை நேற்று மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை ஒன்றிய வாரியாக மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் மற்றும் கலெக்டர் சாரு ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி நேற்று திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெருந்தரக்குடி வாய்க்காலில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 14 கி.மீ தூரத்திற்கு நடைபெற்று வரும் தூர்வாரும் பணி, எண்கண் எட்டியலூர் வாய்க்காலில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் 16.5 கி.மீ தூரத்திற்கு நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பெருமாளகரம் வாய்க்காலில் ரூ.8 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பீட்டில் 6 கி.மீ தூரத்திற்கு நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் ஆகியவற்றை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துடன் பணியினை விரைந்து முடிந்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, நன்னிலம் வட்டம் மகிழஞ்சேரி மற்றும் சலிப்பேரி ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் பார்வையிட்டார்.ஆய்வின் போது, கலெக்டர் சாரு, எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, ஆர்.டி.ஒ சங்கீதா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியளர் சடையப்பன், தாசில்தார்கள் நக்கீரன், பரஞ்ஜோதி, ஜெகதீசன், வெண்ணாறு செயற்பொறியாளர்கள் ராமச்சந்திரன் (திருவாரூர்), மதனசுதாகரன் (தஞ்சை) மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை