21 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற ரேசன் கடை ஊழியர்கள் கோரிக்கை

ராமநாதபுரம், ஆக.1: பொது விநியோக திட்டத்திற்கு என தனித்துறை துவங்க வேண்டும், ரேசன் அரிசி கடத்தலை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு, வருங்கால வைப்பு நிதியை முறைப்படுத்துதல் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தழுவிய போராட்டத்தில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஜூலை 22ம் தேதி முதல் நேற்று வரை கருப்பு உடை அணிந்து பணிக்கு வந்தனர்.

இந்நிலையில் போராட்டத்தின் கடைசி நாளான நேற்று கமுதி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் அலுவலகத்தில் அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது 21 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதில் கடலாடி,முதுகுளத்தூர் மற்றும் கமுதி தாலுகாவை சேர்ந்த ரேசன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்