2027க்குள் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் எஸ்.பி.சிங் பேட்டி

திருப்பரங்குன்றம்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வருகிற 2027க்குள் கட்டி முடிக்கப்படும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் தெரிவித்தார். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் எஸ்.பி.சிங் நிருபர்களிடம் கூறும்போது, ‘மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், டெல்லியில் கூட இல்லாத தொற்றுநோய் தடுப்பு பிரிவு புதிதாக அமைக்கப்பட உள்ளது. இந்த பிரிவுக்காக புதியதாக வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் கட்ட வேண்டியுள்ளதால் கட்டுமானத்திற்கான மதிப்பீடு 20 சதவீதம் கூடுதல் ஆகியுள்ளது. ஒன்றிய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. முழு திட்டத்திற்கான வரைபடம் இறுதி செய்யப்பட்டு, திட்ட மேலாண்மை ஆலோசகர் நியமிக்கப்பட்டு விட்டார். ஜனவரி 2ம் தேதி கட்டிடம் கட்ட ஒப்பந்த புள்ளி இறுதி செய்யப்படும். 3 மாதத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 2027க்குள் கட்டி முடிக்கப்படும்’என்றார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது