2022-23ம் ஆண்டுக்கான சிறப்பு விளையாட்டு விடுதியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க 19ம் தேதி கடைசி நாள்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. சென்னை ஜவகர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் உள்ள சிறப்பு விளையாட்டு விடுதியில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம். அதேபோல், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள ஆண்களுக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதிக்கும், வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள பெண்களுக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதியிலும் விண்ணப்பிக்கலாம்.இதற்கான விளையாட்டு தகுதிகள், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். மேலும், தடகளம், கால்பந்து, கையுந்துபந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டுகளில் 185 செ.மீ-க்கு மேல் உயரமுள்ள மாணவர்களுக்கும், 175 செ.மீ-க்கு மேல் உயரமுள்ள மாணவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் செப்.15 முதல் வரும் 19ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 19ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கடைசி நேரம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை