2022ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதி ஜன.31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்: வாரியம் அறிவுறுத்தல்

சென்னை:  தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளர் வெளியிட்ட அறிக்கை: 2022ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை 2023 ஜனவரி 31ம் தேதிக்குள் வாரியத்திற்கு செலுத்த வேண்டும். வருடத்தில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல நிதி செலுத்த வேலையளிப்பவர் கட்டமைப்பட்டவராவார். தொழிலாளர் நல நிதி செலுத்த தவறினால் தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச் சட்டம் 28ன் படி வருவாய் வரி வசூல் சட்டத்தின்கீழ் அத்தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே 2022ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதித் தொகையினை ஜன.31ம் தேதிக்கு முன்பாக  செயலாளர்,  தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டி.எம்.எஸ். வளாகம் தேனாம்பேட்டை, சென்னை 600 006 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை