Sunday, September 29, 2024
Home » 2021 சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் திமுக ஆட்சி; அசாம், புதுச்சேரி- பாஜக கூட்டணி, கேரளா- கம்யூனிஸ்ட்…ஆங்கில தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் தகவல்.!!!

2021 சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் திமுக ஆட்சி; அசாம், புதுச்சேரி- பாஜக கூட்டணி, கேரளா- கம்யூனிஸ்ட்…ஆங்கில தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் தகவல்.!!!

by kannappan

சென்னை: 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என ஆங்கில தொலைக்காட்சி நடத்தி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 26-ம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய  தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். அசாம் மாநிலத்தில் 3  கட்டமாக தேர்தல் நடைபெறும், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல்  நடைபெறும் என்று அறிவித்தார். 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே-2-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார். இதனால், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பு, பிரச்சார திட்டம் உள்ளிட்ட  ஏற்பாடுகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, 5 மாநிலங்களின் தேர்தலுக்கு முந்தைய  கருத்துக்கணிப்பை ஆங்கில தொலைக்காட்சியான டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது. 5 மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வருவார்? எந்த கூட்டணி எத்தனை தொகுதிகளை பிடிக்கும்? மாநில முதல்வராக யாருக்கு அதிக தகுதி உள்ளிட்டவை குறித்து  ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. தமிழகம்:அதில், குறிப்பாக தமிழகத்தில் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி 158 தொகுதிகளிலும், அதிமுக-பாஜக கூட்டணி 65  தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,மக்கள் நீதி மய்யம்- 5, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 3, இதர கட்சிகள் 3 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலத்திற்கு தகுதியான முதல்வர் யார்? மு.க.ஸ்டாலின்:  38.4% ( திமுக)எடப்பாடி பழனிசாமி: 31% (அதிமுக)வி.கே.சசிகலா: 3.9% (அமமுக)கமல்ஹாசன்: 7.4%( மநீம)ரஜினிகாந்த்: 4.3%புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணி 18 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  காங்கிரஸ்-திமுக கூட்டணி 12 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்திற்கு தகுதியான முதல்வர் யார்? ரங்கசாமி- 42.5% (என்.ஆர்.காங்கிரஸ்)நாராயணசாமி- 35.8% (காங்கிரஸ்)மற்றவர்கள்- 21.7%கேரளா: கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்படுகிறது. இடது ஜனநாயக முன்னணி 82 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயக முன்னணி 56  தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாஜக-1, இதர கட்சிகள் 1 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திற்கு தகுதியான முதல்வர் யார்? பினராய் விஜயன் 38% (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)உம்மன் சாண்டி: 28.3% (காங்கிரஸ்)முல்லப்பள்ளி ராமச்சந்திரன்: 2.5%கே.கே.சைலாஜா : 5.9%ரமேஷ் சென்னிதலா: 4.2%ஷி சஷி தரூர்: 5.8%எறும்பு ஏ.கே. ஆண்டனி: 2.2%கே ஜோஸ் கே மணி: 0.8%மற்றவர்கள்: 12.3% அசாம்: அசாம் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி 67 தொகுதிகளிலும் (42.9% வாக்குகள்), ஐக்கிய முற்போக்கு  கூட்டணி 57 தொகுதிகளிலும் (40.7% வாக்குகள்) , இதர கட்சிகள் 2 தொகுதிகளையும் (16.4% வாக்குகள்) கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

ten − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi