2020-21ம் நிதியாண்டுக்கான வருமான வரி 5.89 கோடி பேர் கணக்கு தாக்கல்

புதுடெல்லி: நாடு முழுவதும் 5.89 கோடி பேர் 2020-21ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். சம்பளதாரர்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டோர் 2020-21ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கெடுவை கடந்த ஜூலையில் ஒன்றிய அரசு 5 மாதத்திற்கு நீட்டித்தது. அதன்படி, கடைசி நாளான நேற்று முன்தினம் லட்சக்கணக்கானோர் இணையதளத்தில் கணக்கை  தாக்கல் செய்தனர்.இந்நிலையில், ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘2020-21ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலை 5.89 கோடி பேர் செய்துள்ளனர். இதில் கடைசி நாளான டிச.31ம் தேதி மட்டுமே 46.11 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர்’ என கூறப்பட்டுள்ளது. முந்தைய 2019-20ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2021ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி வரை கணக்கு தாக்கல் கெடு நீட்டிக்கப்பட்டது. அதில், 5.95 கோடி பேர் கணக்கு தாக்கல் செய்தனர். கடைசி நாளில் 31.05 லட்சம் பேர் தாக்கல் செய்தனர். எந்தெந்த பிரிவினர்?வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய ஐடிஆர் 1 முதல் ஐடிஆர் 7 என 7 படிவங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ரூ.50 லட்சத்துக்கு கீழ் வருமானம் கொண்ட தனிநபர்கள் ஐடிஆர்-1 படிவத்தையும், குடியிருப்பு சொத்து மூலம் வருமானம் பெறுபவர்கள் ஐடிஆர்-2 படிவத்தையும், தொழில் அல்லது மருத்துவம் உள்ளிட்ட தொழில்கள் மூலம் வருமானம் ஈட்டுபவர்கள் ஐடிஆர்-3 படிவத்தையும், ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் கொண்ட இந்து கூட்டு குடும்பம் மற்றும் நிறுவனங்கள் ஐடிஆர்-4 படிவத்தையும், லிமிடெட் மற்றும் கூட்டு நிறுவனங்கள் ஐடிஆர்-6 படிவத்தையும், தொழில் நிறுவனங்கள், அறக்கட்டளைகள் ஐடிஆர்-7 படிவத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும்….

Related posts

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு