2011 ஜாதி கணக்கெடுப்பை வெளியிடும் திட்டமில்லை: ஒன்றிய அரசு உறுதி

புதுடெல்லி: மக்களவையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், ‘சுதந்திரம் அடைந்ததில் இருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்சி, எஸ்டி தவிர மற்ற சாதி வாரியாக ஒன்றிய அரசு கணக்கெடுக்கவில்லை. சமூகப் பொருளாதாரம் மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு 2011, சாதித் தரவைத் தவிர்த்து, ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் http:ecc.gov.in/ என்ற போர்ட்டலில் கிடைக்கும். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, இந்த கட்டத்தில் சாதி விவரங்களை வெளியிடும் திட்டம் எதுவும் இல்லை,’ என்று தெரிவித்தார்….

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு