2004-05 முதல் 2020-21ம் ஆண்டு வரை அரசியல் கட்சிகள் நன்கொடையாக ரூ.15,077 கோடி வசூல்; ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: கடந்த 2004-05ம் ஆண்டு முதல் 2020-21ம் ஆண்டு வரையில் நாடு முழுவதும் தேசிய  கட்சிகள் ரூ.15,077 கோடிக்கு மேல் நன்கொடைகளை பெற்றுள்ளன என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகள்  மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த நன்கொடைகள் தொடர்பான  பிரமாணப் பத்திரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நன்கொடை தொடர்பான  விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2004-05ம் ஆண்டு முதல் 2020-21ம் ஆண்டு வரையில் நாடு முழுவதும் தேசிய கட்சிகள் ரூ.15,077 கோடிக்கு மேல் நன்கொடைகளை பெற்றுள்ளன. கடந்த 2020-21ம் ஆண்டில் மட்டும் தேசிய மற்றும் மாநில கட்சிகள் மொத்தம் 690.67 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளன. தேசிய கட்சிகளின் பட்டியலில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய  மக்கள் கட்சி ஆகிய எட்டு கட்சிகள் உள்ளன. மேலும் 27 மாநில கட்சிகள் உள்ளன. கடந்த 2020-21ம் நிதியாண்டில் மட்டும் 8 தேசியக் கட்சிகள் ரூ.426.74 கோடி நன்கொடையையும், 27 மாநில கட்சிகள் ரூ.263.928 கோடியையும் நன்கொடையாக பெற்றுள்ளன. 2020-21ம் நிதியாண்டில் காங்கிரஸ் கட்சி ரூ.178.782 கோடியைப் பெற்றுள்ளது. இது, மொத்த நிதியில் 41.89 சதவீதம் ஆகும். பாஜக ரூ.100.502 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது மொத்த நிதியில் 23.55 சதவீதம் ஆகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

பட்ஜெட் பாகுபாடு குறித்து விவாதிக்க திமுக, காங். ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்..!!

100 நாள் வேலை திட்டத்துக்கு குறைவான நிதி ஒதுக்கீடு..!!

பங்குச்சந்தைகள் சரிவு