20 ஆண்டுகளில் முதல்முறை தீவிரவாதியின் உடலை பெற்று கொண்ட பாக்.

ஜம்மு:  ஜம்மு காஷ்மீர், ரஜோரி மாவட்டம்  நவ்சேரா செக்டாரில் கடந்த மாதம் 21ம் தேதி இந்திய எல்லைக்குள் ஊடுருவல் முயற்சி நடந்தது. இதில்  பாதுகாப்பு படையினர் சுட்டதில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி படுகாயமடைந்தான்.   உடல்நிலை கவலைக்கிடமானதையடுத்து ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவனை சேர்த்தனர். அவன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி மாவட்டத்தில் உள்ள சப்ஸிகோட்  என்ற கிராமத்தைச் சேர்ந்த தபரக் உசைன்(32) என தெரியவந்தது. அவனை அனுப்பிவைத்தது பாக். ராணுவ கர்னல் யூனுஸ் சவுத்ரி என்று அவன் தெரிவித்தான். அவனுக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 3ம் தேதி மாரடைப்பால் அவன் உயிரிழந்தான். உடல் பிரேத பரிசோதனைக்கு பின் பூஞ்ச் மாவட்ட எல்லையான சக்கான் டா பாக் கிராசிங் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடம் இந்திய ராணுவ அதிகாரிகள் நேற்று உடலை ஒப்படைத்தனர். காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளின் உடல்களை பாகிஸ்தான் ஏற்று கொள்வது இல்லை. ஆனால் 20 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக இப்போதுதான் தீவிரவாதியின் உடலை பாகிஸ்தான் ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேருக்கு ஜூலை 22-ம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கலிஃபோர்னியா மாகாணத்தில் தீவிரமாக பரவி வரும் காட்டுத்தீ: எல்டராடோ விமான நிலையத்துக்கும் பரவியதால் பதற்றம்