20 வகை பாம்பு, பறவைகள் போன்றவை கொண்டுவர திட்டம் மாவட்ட வன அலுவலர் தகவல் வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்காவிற்கு

வேலூர், ஜூன் 27: வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்காவிற்கு நரி, 20 வகை பாம்பு, பறவைகள் போன்றவற்றை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்று மாவட்ட வன அலுவலர் கலாநிதி தெரிவித்தார்.
வேலூர் அருகே உள்ள அமிர்தி வன உயிரியல் பூங்கா சுமார் 25 ஹெக்டேர் பரப்பினை கொண்டது. அமிர்தியில் மான், முதலைகள், கிளி வகைகள், பருந்து, முள்ளம்பன்றி, மான் வகைகள், மயில், முயல், கொக்கு, பாம்புகள் உள்ளிட்ட 304 வகையான உயிரினங்கள் உள்ளது. இயற்கை எழில்மிகுந்த அமிர்தியில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

அங்குள்ள விலங்குகள், பறவைகளை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்து பொழுது போக்குகின்றனர். பொழுது போக்க சிறந்த இடமாக உள்ள அமிர்தியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெள்ளேரி மான், 6 வகையான பாம்புகள் உள்ளிட்டவை கூடுதலாக கேட்டு மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது நரி, 20 வகையான பாம்புகள், பறவைகள், முதலைகள் போன்றவற்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதற்கான மனுக்கள் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கலாநிதி கூறுகையில், ‘வேலூர் அமிர்தியை சுற்றுலாப்பயணிகள் கவரும் வகையில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது அந்த பூங்காவில் என்னென்ன விலங்குகளை பராமரிக்க முடியுேமா, அந்த விலங்குகள் கொண்டுவரப்பட உள்ளது. இதில் நரி, 20 வகையான பாம்புகள், முதலைகள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. விரைவில் சுற்றுலா பயணிகளுக்கு இவை கொண்டுவரப்பட்டு காட்சிபடுத்தப்படும்’ என்றார்.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்