20 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் புதிதாக நேற்று 1,575 பேர் பாதிப்பு

சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,61,231 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,575 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,21,086 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனை மற்றும் வீட்டுத்தனிமை என 16,315 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 1,610 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 25,69,771 ஆக உள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 20 பேர் நேற்று உயிரிழந்தனர். அதிகபட்சமாக கோவையில் 4 பேர், சென்னை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேர், ஈரோடு, சேலம், திருவள்ளூர் 2 ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், அரியலூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா 1 நபர் என 20  பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 35 ஆயிரம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னையில் நேற்று புதிதாக 167 பேர், கோவை 244, ஈரோடு 109 என 3 மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாகவே உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்