அமெரிக்க ஏரியில் மூழ்கி 2 இந்திய மாணவர்கள் பலி

நியூயார்க்: அமெரிக்க ஏரியில் மூழ்கி இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 கல்லூரி மாணவர்கள் பலியாகினர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் இண்டியானா போலிஸ் நகரில் மோன்ரோ ஏரி உள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர்கள் சிதான்ந்த் ஷா(19), ஆர்யன் வைத்யா(20) ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் கடந்த 15ம் தேதி ஏரிக்கு சென்று படகு சவாரி செய்தனர். அதன் பின் இருவரும் ஏரியில் நீந்தியுள்ளனர். நீண்ட நேரமாகியும் இருவரும் கரைக்கு திரும்ப வராததால் சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் தண்ணீரில் இறங்கி தேடினர். இதில், எந்த பலனும் கிடைக்கவில்லை. தீவிர தேடுதலுக்கு பின் இருவரின் சடலங்களையும் மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். இதுகுறித்து, மீட்பு படையை சேர்ந்த அதிகாரி ஏஞ்செலா கோல்டு மேன் கூறுகையில்,‘‘ காணாமல் போன இருவரையும் மீட்பதற்கு நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அதே போல் சோனார் கருவியும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் கடுமையான காற்று, மழையின் காரணமாக இதில் பின்னடைவு ஏற்பட்டது. பலியான இரண்டு மாணவர்களும் இண்டியானா பல்கலைகழகத்தின் மேலாண்மை கல்லூரி மாணவர்கள்’’ என்றார்.

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்