+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படும்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து சரிபார்த்து வழங்கப்படுகிறது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து சரிபார்த்து வழங்க உள்ளனர். மதிப்பெண் பட்டியலில் பிழை இருந்தால் இயக்குநரகத்துக்கு தெரிவிக்கலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அசல் மதிப்பெண் சான்றிதழ் விரைவில் வழங்கப்படும் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் ஏப். 3-ம் தேதி வரை நடந்தது. தமிழகம் முழுவதும் 3,324 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. சுமார் 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வை எழுத பதிவு செய்திருந்தனர்.

தமிழகத்தில் மே 8-ம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சார் அன்பில் மகேஷ் சென்னை கோட்டூர்புரம் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். தமிழகத்தில் 8,03,385 மாணாக்கர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் அதிகளவில் மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்தநிலையில் மாவட்ட வாரியாக மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று காலை 11 மணி முதல் www.dge.tn.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பள்ளிகள் வாயிலாக இன்று காலை 11 மணி முதல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.dge.tn.nic.in இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த தேதி, பதிவு எண் விவரத்தை அளித்து இந்த இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வைத்து கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் என்றும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். www.dge.tn.gov.in என்று இணையதளத்தில் தனது தற்காலிக சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தனித்தேர்வர்கள் தங்கள் விண்ணப்பித்த தேர்வு மையங்களில் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம் என்று அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.

 

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்