ஊட்டியில் 17 நாள் மலர் கண்காட்சி நிறைவு 2.41 லட்சம் பேர் கண்டு களித்தனர்

ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடந்த 10ம் தேதி 126வது மலர் கண்காட்சி துவங்கியது. ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு 20 அடி உயரத்தில் டிஸ்னி வேர்ல்டு மலர் அலங்காரம், பல ஆயிரம் மலர்களை கொண்டு நீலகிரி மலை ரயில், காளான், பிரமீடு, ஆக்டோபஸ், கிதார், பூங்கொத்து, படகு உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த மலர் கண்காட்சி 20ம் தேதி நிறைவடைய இருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், மேலும் 6 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டது. பூங்காவில் புதிதாக சில மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் மலர் கண்காட்சி நிறைவுபெற்றது. 17 நாட்களாக நடந்த மலர் கண்காட்சியை 2 லட்சத்து 41 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் மேலும் சில நாட்கள் மலர் அலங்காரங்களை வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 

Related posts

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை; கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!