2 விமானங்களில் இன்ஜின் கோளாறு அவசர தரையிறக்கம்

புதுடெல்லி: கோ பர்ஸ்ட் நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு விமானங்களில் நேற்று இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கோ பர்ஸ்ட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று மும்பையில் இருந்து லே நோக்கி சென்றது. இந்நிலையில் விமானத்தின் இரண்டாவது இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டதை தொடர்ந்து விமானம் டெல்லி திருப்பிவிடப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதேபோல் ஸ்ரீநகரில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்தின் இரண்டாவது இன்ஜினிலும் நடுவானில் கோளாறு கண்டறியப்பட்டது.  இதனை தொடர்ந்து விமானம் மீண்டும் ஸ்ரீநகர் திரும்பியது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது….

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு