2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

 

விருதுநகர், ஜூலை 2: சீட்டு பணம் பிடித்து தலைமறைவானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சங்கரலிங்கபுரம், கட்டனார்பட்டி கிராம மக்கள் நேற்று மனு அளித்தனர். மனுவில், விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரத்தில் 1990 முதல் இயங்கி வந்த ஒரு நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானோர் மாதச் சீட்டு பணம் கட்டி வருகிறோம். 34 வருடங்களாக கட்டிய பணத்தை திருப்பி கொடுத்து வந்தனர்.

இந்த வருடம் மே மாதம் முதல் மாத தவணை வாங்க வரவில்லை. முடிவடைந்த சீட்டுகளுக்கும் பணம் கொடுக்கவில்லை. கடந்த 2 மாதங்களாக அலுவலகம் மூடி கிடக்கிறது. நிறுவனத்தை நடத்தியவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. நிறுவனத்தில் முன்னாள் தலைமை ஆசிரியர் உட்பட பலர் பங்குதாரர்களாக இருக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட பலரை காணவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பணம் வசூலித்து மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்