2 மாதத்துக்கு முன் காணாமல்போன மூதாட்டி கருகிய நிலையில் எலும்புகூடாக மீட்பு

பண்ருட்டி, அக். 18: பண்ருட்டி அருகே உள்ள மேல் குமாரமங்கலத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் எரிந்த நிலையில் எலும்பு கூடு கிடந்தது. இதனை பார்த்த நில உரிமையாளர் இது குறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விழுப்புரத்தில் இருந்து மண்டல தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் எரிந்த நிலையில் இருந்த எலும்பு கூட்டின் ஒரு சில பகுதிகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். மேலும், எரிந்த நிலையில் இருந்த எலும்பு கூட்டின் அருகில் கவரிங் வளையல்களும், பாதி எரிந்த நிலையில் புடவையும் கிடந்தது.

இதையடுத்து இறந்தவர் பெண்ணாக இருக்கலாம் என கோணத்தில் போலீசார் கணித்து, அப்பகுதியில் காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்னர். இந்நிலையில், வளையல் தன்னுடைய தாயின் வளையல் என இளம்பெண் ஒருவர் அங்கு அழுதபடி வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தனது தாயார் காசியம்மாள் (80) என்பவர் 2 மாதங்களுக்கு முன் காணாமல் போனதாகவும், அவர் அணிந்திருந்த வளையல் இதுதான் எனவும், புடவையும் காணாமல் போன நாளில் எனது தாய் அணிந்திருந்தது என இளம்பெண் கூறி கதறி அழுதார். இதையடுத்து மூதாட்டி எரித்து கொல்லப்பட்டாரா அல்லது கரும்பு தோட்ட சோலைகளை தீயிட்டு எரித்தபோது அதில் தவறி விழுந்து எரிந்து போனாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு