2 பாலின உறுப்புடன் பிறந்த குழந்தை பலி

 

தாம்பரம், ஜூலை 11: மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் அமுதா (பெயர் மாற்றம்செய்யப்பட்டுள்ளது). இவர் 2வது முறையாக கருவுற்றபோது மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள பெண் மருத்துவரிடம் மகப்பேறு சம்பந்தமான ஆலோசனைகள் மற்றும் பலமுறை ஸ்கேன் செய்து வந்துள்ளார். இந்நிலையில், அமுதா பிரசவ வலி காரண மாக கடந்த மே மாதம், எழும்பூரில் உள்ள குழந்தைகள் மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுள்ளார். இதில், குழந்தைக்கு ஆண் உறுப்பு மற்றும் பெண்ணுறுப்பு என 2 பாலின உறுப்புகள் இருந்தன.

அதுமட்டுமில்லாமல் அந்த குழந்தைக்கு இருதய நோய், மற்றும் சுவாசக் கோளாறு இருந்ததாகவும், கடந்த 6ம் தேதி குழந்தை இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆனான அனிதா தனது குழந்தைக்கு 2 பாலின உறுப்புகள் மற்றும் இருதயத்தில் பிரச்னை இருந்ததையும், தான் மகப்பேறு ஆலோசனை பெற்றபோது மருத்துவர் ஏன் தெரிவிக்கவில்லை என கோரி அனிதா தனது கணவர் மற்றும் 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுடன் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் தகராறு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர், பரங்கிமலை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அங்கு வந்த மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் பாதிக்கப்பட்ட பெண், மற்றும் வழக்கறிஞர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனிதாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து மருத்துவ துறை இயக்குனரகத்தில் புகார் தெரிவித்தால் நீதி கிடைக்கும் என கூறினர். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு