2 ஆயிரம் பணியிடங்கள் நிரப்ப வேண்டிய நிலையில் கோயில்களில் முதல்கட்டமாக 600 பேருக்கு பணி நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

சென்னை: தமிழக கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதனால் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் உத்தரவின் பேரில் கோயில்களில் உள்ள காலி பணியிடங்களின் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அந்த அறிக்கையின் பேரில், மாநிலம் முழுவதும் கோயில்களில் உள்ள 2 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 600 காலி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்தது. இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட பணியிடத்தில் காலியாக உள்ள அர்ச்சகர், பட்டாச்சாரியார், ஓதுவார், பூசாரி தொழில்நுட்ப உதவியாளர், காவலர், கணினி தட்டச்சர், அலுவலக உதவியாளர், மின் பணியாளர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு இளைஞர்கள் பலர் விண்ணப்பித்தனர். இதை தொடர்ந்து அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டன. இதில், தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 600 பேருக்கு நாளை காலை 8 மணியளவில் பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இது தொடர்பாக அறநிலையத்துறை சார்பில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் இதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பணி நியமன ஆணையை வழங்குகிறார்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு