2 நாட்களாக அதிகரிக்கும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.35,720க்கு விற்பனை: வெள்ளி கிராமிற்கு ரூ.73.90-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.35,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே பெரியளவில் மாற்றமின்றி ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலையானது சரியத் தொடங்கியிருந்தாலும், நேற்றும் இன்றும் மீண்டும் சற்று ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. தங்கம் விலையானது இன்று ஏற்றம் கண்டிருந்தாலும், இம்மாத தொடக்கத்தில் இருந்து 10 கிராமுக்கு 2,000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு மூன்று மாத உச்சத்தினை தொட்டுள்ள நிலையில், தங்கம் விலையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.நேற்றைய தினம், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து சவரன் ரூ.35,560க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்றைய தங்கத்தின் நிலவரம், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.35,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.4,465க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு குறைந்து ரூ.73.90க்கு விற்பனை செய்யப்படுகிறது….

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.54,600 ஆக விற்பனை

ஜூலை-12: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

தங்கம் விலையில் திடீர் மாற்றம் சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது