2 தலையுடன் ஒட்டிப் பிறந்த குழந்தை: ஒடிசாவில் வியப்பு..!

கேந்திரபாரா: ஒடிசாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒட்டிய இரண்டு தலையுடன், மூன்று கைகளுடன் பெண் ஒருவருக்கு விநோத குழந்தை பிறந்துள்ளது.  ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரே உடலுடன் இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகளுடன் கர்ப்பிணி பெண் ஒருவர் ஒட்டிப் பிறந்த குழந்தையை பெற்றெடுத்தார். இக்குழந்தையை அப்பகுதியினர் விநோதத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து கேந்திரபாரா மாவட்ட மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தேபாஷிஷ் சாகு கூறுகையில், ‘ஏழை கர்ப்பணி பெண்ணுக்கு இது இரண்டாவது பிரசவம். தற்போது அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ள இந்த குழந்தையானது ஒரே உடலுடன் இரு தலைகளுடன் உள்ளது. இரு வாய்களிலிருந்தும் உணவை உட்கொள்கிறது. இரண்டு மூக்குகளும் உள்ளன. மூன்று கைகள் மற்றும் இரண்டு கால்களும் உள்ளன.  மருத்துவ ஆராய்ச்சியின்படி, இரட்டை குழந்தை உருவாகும் செயல்முறையானது, கர்ப்பமான ஒரு சில வாரங்களுக்குள் தொடங்குகிறது. அதன்பிறகு கருவுற்ற முட்டையைப் பிரிக்கும் செயல்முறை தொடங்குகிறது. சில காரணங்களால் பகிர்வு செயல்முறையானது பாதியளவோ அல்லது கருவுற்ற முட்டை பிரிக்கப்படாதபோது, இதுபோன்ற தனித்தனி கைகள் அல்லது கால்களைக் கொண்ட குழந்தைகள் பிறக்கிறார்கள். ஆனால் உடல் மட்டும் இணைக்கப்பட்டு உள்ளன. இதேபோன்ற பிரசவங்கள் 10 லட்சத்தில் ஒன்றாக இருக்கின்றன’ என்றார். …

Related posts

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்குகிறேன்.! பிரிட்டனின் புதிய பிரதமராக வெற்றி பெற்றுள்ள கீர் ஸ்டார்மர்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

மோடி அரசு ஆகஸ்ட்-ல் கவிழ்ந்துவிடும் : லாலுபிரசாத்