2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை தீவிர சிகிச்சையில் காதலன் செய்யாறு அருகே தகாத உறவால் நேர்ந்த விபரீதம்

செய்யாறு, ஜூன் 16: செய்யாறு அருகே தகாத உறவு குறித்து வெளியே தெரிந்ததால் 2 குழந்தைகளின் தாய் தனது காதலனுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். காதலனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மேனகா(30). இவரது கணவர் சமையல்காரர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்தவர் இன்பம். இவரது மனைவி ஆஷா. இந்நிலையில், கடந்த 12ம் தேதி ஆஷா, மேனகாவின் கணவருக்கு போன் செய்து குடும்ப பிரச்னை குறித்து பேச வேண்டும் உடனே நேரில் வாருங்கள் என கூறியுள்ளார். அதன்பேரில், அவரும், மேனகாவும் ஆஷா வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது, ஆஷா, `எனது கணவர் இன்பத்திற்கும் உனது மனைவி மேனகாவுக்கும் தகாத உறவு உள்ளது. எனவே, அவரை கண்டித்து வையுங்கள்’ என கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மேனகாவின் கணவர் அவரை கண்டித்துள்ளார். பின்னர், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மறுநாள் (13ம் தேதி) காலை மேனகாவின் கணவர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். தொடர்ந்து, தகாத உறவு குறித்து வெளியே தெரிந்து விட்டதாலும், இனி ஒன்றாக இருக்க முடியாது என்பதாலும் மனவேதனை அடைந்த மேனகாவும், இன்பமும் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், 2 பேரையும் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமணையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேனகா நேற்று முன்தினம் இறந்தார். இன்பத்திற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தகாத உறவு குறித்து வெளியே தெரிந்ததால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை