2வது இன்னிங்சிலும் நியூசி. திணறல்: வெற்றி வாய்ப்பில் வங்கதேசம்

மவுன்ட் மவுங்கானுயி: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. பே ஓவல் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச… நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 328 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய வங்கதேசம்  3ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன் எடுத்திருந்தது.   யாசிர் அலி 11, மெகதி ஹசன் 20 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். மெகதி 47 ரன்,யாசிர் 26 ரன்னில் வெளியேற, தஸ்கின் அகமது 5 ரன், ஷோரிபுல் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினர். வங்கதேசம் முதல் இன்னிங்சில் 458 ரன் குவித்து ஆல் அவுட்டானது.நியூசி. தரப்பில் போல்ட் 4, வேக்னர் 3,  சவுத்தீ 2, ஜேமிசன் 1 விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 130 ரன் பின்தங்கிய நிலையில்  2வது இன்னிங்சை தொடங்கிய நியூசி. அணிக்கு கேப்டன் லாதம் 14, கான்வே 13,  நிகோலஸ் (0), பிளண்டெல் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பொறுப்பாக விளையாடி அரைசதம் அடித்த வில் யங் 69 ரன்னில் வெளியேறினார். 4ம் நாள் ஆட்ட முடிவில் நியூசி. 5 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்திருந்தது. ராஸ் டெய்லர் 37, ரச்சின் ரவீந்திரா 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். வங்கதேசம் தரப்பில் எபாதத் உசைன் 4, தஸ்கின் அகமது 1 விக்கெட் எடுத்தனர். நியூசி. கை வசம் 5 விக்கெட் இருக்க 17 ரன் மட்டுமே முன்னிலை பெற்றிருப்பதால், கடைசி நாளான இன்று வங்கதேசம் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது….

Related posts

சில்லிபாயின்ட்…

வங்கத்தின் வேகத்தில் சரிந்த இந்தியா அஸ்வின் அதிரடியால் நிமிர்ந்தது: கை கொடுத்த ஜடேஜா, ஜெய்ஸ்வால்

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா