2ம் பருவ பாடப்புத்தகங்கள் தயார் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்

 

ஈரோடு,அக்.5: அரசு பள்ளிகளுக்கு தேவையான 2ம் பருவ பாடபுத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.  அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து தேவைப்பட்டியல் அடிப்படையில் பாடப்புத்தங்கள் ஒவ்வொரு மாவட்டமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை பருவம் அடிப்படையிலும், 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒரே புத்தகமாகவும் வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் முதல் பருவம் முடிவடைந்து வருகின்ற 7ம் தேதி முதல் 2ம் பருவம் தொடங்க உள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக 2ம் பருவ பாட புத்தகங்கள்,நோட்டுகள் ஆகியவை ஈரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தடைந்தது.

இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்குவதற்கான பாடப்புத்தங்கள் தொடக்கப்பள்ளிகளுக்கு அந்தந்த ஒன்றியத்தில் உள்ள மையங்களுக்கும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு நேரடியாகவும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளான 7ம் தேதி மாணவ, மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள், நோட்டுகள் ஆகியவை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உத்திரவிட்டுள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை