தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: லாபுசாக்னே சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா வெற்றி

மங்காங் ஓவல்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 டி.20 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று தென்ஆப்ரிக்காவை ஒயிட்வாஷ் செய்த நிலையில் அடுத்ததாக 5 ஒரு நாள் போட்டிகளில் மோதுகின்றன. இதில் முதல் ஒரு நாள் போட்டி நேற்று மங்காங் ஓவல் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்க அணியில் கேப்டன் பவுமா நாட்அவுட்டாக 114 ரன் எடுத்தார். மார்கோ ஜான்சன் 32, மார்க்ரம் 19, டிகாக் 11 ரன் என மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். 49 ஓவரில் 222 ரன்னுக்கு தென்ஆப்ரிக்கா ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய பவுலிங்கில் ஹேசல்வுட் 3 விக்கெட் எடுத்தார்.

பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில், டேவிட் வார்னர் 0, டிராவிஸ் ஹெட் 33, கேப்டன் மிட்செல் மார்ஷ் 17, அலெக்ஸ் கேரி 3, ஸ்டோனிஸ் 17 ரன்னில் வெளியேற 113 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறியது. ரபாடா வீசிய பவுன்சர் கேமரூன் கிரீனின் ஹெல்மெட்டில் தாக்கியது. இதனால் அவர் ரிட்டயர்ட் ஹர்ட்டில் வெளியேற அவருக்கு பதிலாக களம் இறங்கிய மார்னஸ் லாபுசாக்னே நாட் அவுட்டாக 80, ஆஷ்டன் அகர் 48 ரன் விளாச 40.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மார்னஸ் லாபுசாக்னே ஆட்டநாயகன் விருதுபெற்றார். 2வது போட்டி நாளை இதே மைதானத்தில் நடக்கிறது.

 

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்