ரூ.71.94 கோடியில் கட்டப்பட்ட 19 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சிவகங்கை, தேனி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, மதுரை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.71.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 19 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் திட்டக்கூறு மூலம் சிவகங்கை மாவட்டம் கண்ணன்குடி, மானாமதுரை, சிங்கம்புணரி, திருப்புவனம் மற்றும் திருப்பத்தூர், தேனி மாவட்டம் தேனி, கம்பம், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம், ரிஷிவந்தியம், மதுரை மாவட்டம் மேலூர், ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை, பெரணமல்லூர், போளூர், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, திருச்சி மாவட்டம் வையம்பட்டி, வேலூர் மாவட்டம் காட்பாடி ஆகிய இடங்களில் ரூ.71 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 19 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் திறந்து வைத்தார்.

அதேபோன்று, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ரூ.35 கோடியே 25 லட்சம் மதிப்பிலான 391 வாகனங்கள் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்து, வாகனங்களுக்கான சாவிகளை அலுவலர்களிடம் வழங்கினார். திமுக அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக மொத்தம் ரூ.83 கோடியே 80 லட்சம் மதிப்பிலான 725 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், இ.பெரியசாமி, எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இயக்குநர் பொன்னையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

காஷ்மீரில் 2 இடங்களில் மோதல்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: போலீஸ் ஏட்டு பலி; 6 வீரர்கள் காயம்

டாக்டர்கள் மீது தாக்குதல் எதிரொலி; ஜூனியர் மருத்துவர்கள் மீண்டும் பணி நிறுத்தம்

குடும்பத்துடன் அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றபோது தெலங்கானா துணை முதல்வர் வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேர் கைது: மேற்கு வங்க போலீசார் அதிரடி