182 ஏக்கர் அரசு நில மோசடியில் கைது அதிமுக நிர்வாகி உட்பட 3 பேரை காவலில் விசாரிக்க சிபிசிஐடி மனு

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் 182 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்த வழக்கில் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், சர்வேயர் பிச்சைமணி, அவரது உதவியாளர் அழகர் ஆகிய 3 பேர் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு, தேனி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் நேற்று மனு செய்தனர். விசாரணைக்கு பின் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே நில மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் ஆனந்தி, நேற்று தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்….

Related posts

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி!

பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம்: நீதிபதி பவானி சுப்பராயன்!