18, 19ம்தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி கலெக்டர் அழைப்பு

மயிலாடுதுறை, ஜன, 10: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி. கல்லூரி மாணவர்களிடையே படைப்பாறறலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் மாவட்ட நிலையில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றன.அதன் அப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பயிலக்கூடிய பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் வரும் 18ம்தேதி (வியாழக்கிழமை) காலை 9.15 மணிக்கு மயிலாடுதுறை, கூறைநாடு, என்.கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கு 19ம்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மயிலாடுதுறை. தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரியிலும் நடைபெறவுள்ளன. கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிக்கு மூன்று பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசு ரூ.10000, இரண்டாம் பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000 என வழங்கப்படவுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் 11, 12ம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்களுக்கு மயிலாடுதுறை முதன்மைக்கல்வி அலுவலகம் வாயிலாகவும், கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு கல்லூரி மண்டல இணை இயக்குநர் வாயிலாகவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தமிழார்வமுள்ள மாணவர்கள் மேற்கூறியுள்ள போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு