18 வயது பெண்ணுக்கு வெளியுறவுத்துறை பதில் அளித்தது ஏன்?.. பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆவேசம்

டெல்லி: விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்கிற்கு எதிராக சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஷ்கர், போன்ற பிரபலங்கள் திசை திருப்பப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மக்களவையில் குரியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் எம்பிக்கள் குழு தலைவர் ஆதி ரஞ்சன் சவுத்ரி செங்கோட்டையில் சில கொடியேற்ற அனுமதி அளித்துவிட்டு விவசாயிகள் மீது ஆட்சியாளர்கள் பலி சுமத்தியதாக கூறினார். இத்தனை கட்டுப்பாடுகளை மீறி செல்வதற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா துணைபோனதாக அவர் மறைமுகமாக குற்றம் சாட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பேசுகையில் நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாக கூறினார். விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய 18 வயது இளம் பெண்ணுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏன்? ஏற்பட்டது என்று அவர் கேள்வி எழுப்பினார். கடும் குளிரில் போராடும் விவசாயிகளுக்கு உணவு குடிநீர் வழங்க கூட மத்திய அரசு முன்வரவில்லை என்று மஹுவா மொய்த்ரா தெரிவித்தார். வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், ரிஹானா ஆதரவை தெரிவித்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு எழுந்ததை ஏற்க மறுத்துவிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமர் மோடியை குறிப்பிட்டே அவையில் கடும் விமர்சனம் செய்தனர்….

Related posts

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த சாலை விபத்தில் 10 பேர் பலி.! 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

ஏடிஎம் கொள்ளையர்களை அழைத்துச் சென்றது கேரள போலீஸ்..!!

“கணவன் – மனைவி இடையிலான பலவந்த பாலியல் உறவு குற்றமில்லை” : ஒன்றிய அரசு