18 ஆயிரம் லஞ்சம் விஏஓ கைது

ஸ்ரீபெரும்புதூர்: பெரும்புதூர் அருகே மணிமங்கலம் அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் பாபு. இவரது உதவியாளர் சுரேஷ். கடந்த சில நாட்களுக்கு தனது வீட்டுமனைக்கு என்ஓசி சான்று வழங்க வேண்டும் என விஏஓ பாபுவிடம் சென்னையை சேர்ந்த ஒருவர் மனு அளித்தார். அதற்கு, வீட்டுமனைக்கு என்ஓசி வழங்க ₹20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என உதவியாளர் சுரேஷ் கேட்டுள்ளார்.இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மனுதாரர், சென்னை லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைப்படி, விஏஓ சுரேஷுக்கு ‘கூகுள் பே’ மூலம் ₹18 ஆயிரம் அனுப்பினார்.இதைதொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், நேற்று முன்தினம் என்ஓசி சான்று வழங்க ₹18 ஆயிரம் லஞ்சமாக பெற்ற விஏஓ பாபு, உதவியாளர் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்….

Related posts

மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 55 வருடம் சிறை

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?