18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், அக்.6:விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக கூட்டுறவுத்துறை சங்க துணைத்தலைவர் முருகன் தலைமையில் கிளைச் செயலாளர் முனியாண்டி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு அமுல்படுத்திய அதே தேதியில் வழங்க வேண்டும். அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் நிலுவையில் உள்ள அரசாணைகளை வெளியிட வேண்டும்.

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு வழங்குவது போல் போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி பகுதி ஊழியர்களுக்கு வீட்டுவாடகைப்படி, நகர ஈட்டுப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆயிரம் அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி