Friday, September 20, 2024
Home » 173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் 3வது முறையாக போட்டி

173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் 3வது முறையாக போட்டி

by kannappan

சென்னை: சென்னை கொளத்தூரில் மு.க.ஸ்டாலின், காட்பாடியில் துரைமுருகன், திருச்சி மேற்கில் கே.என்.நேரு, திருக்கோவிலூரில் பொன்முடி, ஆத்தூரில் ஐ.பெரியசாமி, மொடக்குறிச்சியில் சுப்புலட்சுமி ெஜகதீசன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் உள்பட தமிழகம் முழுவதும் 173 பேர் கொண்ட திமுக வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக முழுவீச்சில் களம் இறங்கியது. தொடர்ந்து கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகள், மதிமுக 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6, விடுதலைச் சிறுத்தைகள்கட்சி 6, இந்திய யூனியன்முஸ்லிம் லீக் கட்சி 3, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமைக் கட்சி 1, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி ஆகியவைக்கு தலா ஒரு இடங்களும் ஒதுக்கப்பட்டன. கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்சிகள் ேபாட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்தும் ஒப்பந்தம் கையெழுத்தானது.கூட்டணி கட்சிகளுக்கு போக மீதமுள்ள 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த வேட்பாளர் பட்டியலுடன் நேற்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு சென்றார். அங்கு கலைஞரின் படத்துக்கு கீழ் வேட்பாளர் பட்டியலை வைத்து வணங்கினார். பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்திற்கும் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கும் வேட்பாளர் பட்டியலை வைத்து வணங்கினார்.பின்னர் அவர் காரில் அண்ணா அறிவாலயம் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து பிற்பகல் 12.30 மணியளவில் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் உடன் இருந்தனர்.இதில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். தொடர்ந்து 3வது முறையாக அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் பொது செயலாளர் துரைமுருகன் களம் காண்கிறார். திருச்சி மேற்கில்  கே.என்.நேரு, திருக்கோவிலூரில் பொன்முடி, ஆத்தூரில் ஐ.பெரியசாமி,  மொடக்குறிச்சியில் சுப்புலட்சுமி ெஜகதீசன்,  சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போட்டியிடுகின்றனர். சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ மீண்டும் சைதாப்பேட்டை தொகுதியிலும், துறைமுகம் தொகுதியில் சேகர்பாபுவும், மறைந்த பேராசிரியர் அன்பழகனின் பேரன் வெற்றி அழகன் வில்லிவாக்கம் தொகுதியிலும், முன்னாள் எம்எல்ஏ ெஜ.அன்பழகனின் தம்பி ஜெ.கருணாநிதி தி.நகரிலும் போட்டியிடுகின்றனர். இதே போல 173 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக 6 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3, மனித நேய மக்கள் கட்சியில் ஒரு இடம், தமிழக வாழ்வுரிமை கட்சி 1, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி 1, ஆதித்தமிழர் பேரவை 1, மக்கள் விடுதலை கட்சி 1 ஆகியவை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதையடுத்து 234 தொகுதிகளில் 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மத்திய அரசுக்கு அடிபணிந்து மக்களுக்கு எதிரான திட்டங்களை அதிமுக அரசு தமிழகத்தில் திணித்து வந்தது. மக்களுக்கு எதிரான இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். அது திமுகவால் மட்டுமே முடியும் என்று மக்கள் நினைத்து வந்தனர். இதனால், அதிமுகவை எதிர்கொள்ளும் வகையில் பலமான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு ஏற்றார் போல் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் வேட்பாளர் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி பல்வேறு கட்டங்களாக விரிவாக ஆய்வுகள் நடத்தி, அதிலிருந்து சிறந்த வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார். இந்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக மக்களையும் பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.அதிமுக ஆட்சியில் தமிழக அமைச்சர்கள் கடுமையான வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். எனவே, அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று குரல் வலுத்து வந்தது. அதன்படி இடைப்பாடி தொகுதியில் போட்டியிடும்  முதல்வர் எடப்பாடியை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். போடிநாயக்கனூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து, கார்த்திகேய சிவசேனாதிபதி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஜல்லிகட்டு போராட்டத்தை ஒருங்கிணைத்தவர். அது மட்டுமல்லாமல் மக்களுக்கு எதிராக கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ஆவர். பல்வேறு போராட்டங்களையும் முன் எடுத்து வந்துள்ளார்.  கரூர் தொகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக, முன்னாள் ேபாக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிறுத்தப்பட்டுள்ளார். விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக டாக்டர் பழனியப்பன் நிறுத்தப்பட்டுள்ளார். இதே போல் அமைச்சர்களை தோற்கடிக்கும் வகையில் பவுர் புல்லான வேட்பாளர்கள் திமுகவில் களம் இறக்கப்பட்டுள்ளனர். திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் உடனடியாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினர்.திமுகவுடன் மோதும் பிற கட்சிகளின் தொகுதிகள் எத்தனை?தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் 173 தொகுதிகளில் திமுக போட்டிடுகிறது. இதில், 130 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதுகின்றன. 18 தொகுதிகளில் திமுகவுடன் பாமக மோதுகிறது. 14 தொகுதிகளில் பாஜ மோதுகிறது. 4 தொகுதிகளில் தமாகா நேரடியாக மோதுகிறது. 9 டாக்டர்கள் போட்டிதிமுகவில் போட்டியிடும் வேட்பாளர்களில் 9 பேர் டாக்டர்கள். புதுக்கோட்டை டாக்டர் முத்துராஜா, ஆலங்குளம் டாக்டர் பூங்கோதை,  பொள்ளாச்சி டாக்டர் வரதராஜன், ராசிபுரம் டாக்டர் மதிவேந்தன், வீரபாண்டி டாக்டர் தருண், விழுப்புரம் டாக்டர் லட்சுமணன், மைலம் டாக்டர் மாசிலாமணி, பாப்பிரெட்டிப்பட்டி டாக்டர் பிரபு ராஜசேகர், ஆயிரம்விளக்கு டாக்டர் எழிலன்.33 ேபர் வழக்கறிஞர்கள்திமுகவில் போட்டியிடும் வேட்பாளர்களில் 33 பேர் வழக்கறிஞர்களாக உள்ளனர். அதன் விவரம்:- ஆர்.கே.நகர் தொகுதி ஜே.ஜே.எபினேசர், பெரம்பூர் ஆர்.டி.சேகர், திருவிக நகர் தாயகம் கவி, எழும்பூர் பரந்தாமன், சைதாப்பேட்டை மா.சுப்ரமணியன், மயிலாப்பூர் த.வேலு, மாதவரம் எஸ்.சுதர்சனம், திருத்தணி எஸ்.சந்திரன், பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி, காஞ்சிபுரம் சி.வி.எம்.பி.எழிலரசன், காட்பாடி துரைமுருகன், பாலக்கோடு பி.கே.முருகன், சேலம் வடக்கு ரா.ராஜேந்திரன், பழனி ஐ.பி.செந்தில்குமார், ஆத்தூர் ஐ.பெரியசாமி, கிருஷ்ணராயபுரம் க.சிவகாமசுந்தரி, பெரம்பலூர் எம்.பிரபாகரன், குறிஞ்சிப்பாடி எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சீர்காழி மு.பன்னீர்செல்வம், நன்னிலம் எஸ்.ஜோதிராமன், திருவிடைமருதூர் கோ.வி.செழியன், திருவையாறு துரை.சந்திரசேகர், ஒரத்தநாடு எம்.ராமச்சந்திரன், பட்டுக்கோட்டை கா.அண்ணாதுரை, திருமயம் எஸ்.ரகுபதி, திருப்பத்தூர் பெரியகருப்பன், முதுகுளத்தூர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், விளாத்திக்குளம் மார்க்கண்டேயன், ஒட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா, சங்கரன்கோவில் ஈ.ராஜா, அம்பாசமுத்திரம் ரா.ஆவுடையப்பன், மடத்துக்குளம் ெஜயராமகிருஷ்ணன், வேடசந்தூர் காந்திராஜன்.12 பேர் பெண்கள்ஆலங்குளம்-பூங்கோதை ஆலடி அருணா, தூத்துக்குடி-கீதா ஜீவன், மதுரை மேற்கு-சின்னம்மாள், மானாமதுரை-தமிழரசி, கிருஷ்ணராயபுரம்-சிவகாம சுந்தரி, தாராபுரம் (தனி)-கயல்விழி செல்வராஜ், மொடக்குறிச்சி-சுப்புலட்சுமி ஜெகதீசன், கெங்கவல்லி-ரேகா பிரியதர்ஷினி,  ஆத்தூர்-ஜீவா ஸ்டாலின், திண்டிவனம் (தனி) பி.சீத்தாபதி சொக்கலிங்கம், குடியாத்தம்-அமலு, செங்கல்பட்டு-வரலட்சுமி மதுசூதனன்.108 பேர் பட்டதாரிகள்தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் 173 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் டாக்டர்கள், பிஇ பட்டதாரிகள், இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் என 108 பட்டாதாரிகள் உள்ளனர். 13 பேர் பொறியாளர்கள், 9 பேர் டாக்டர்கள், 31 பேர் வழக்கறிஞர்கள், 6 பிஎச்டி பட்டதாரிகள், 20 பேர் முதுநிலை பட்டதாரிகள், 20 பேர் இளநிலை பட்டதாரிகள்.திமுக வேட்பாளர் பட்டியல்எண்    தொகுதி    வேட்பாளர் பெயர்1    பத்மநாபபுரம்    த.மனோ தங்கராஜ்2    நாகர்கோவில்    சுரேஷ் ராஜன்3    கன்னியாகுமரி    எஸ்.ஆஸ்டின்4    ராதாபுரம்                      எம்.அப்பாவு5    பாளையங்கோட்டை    மு.அப்துல் வகாப்6    அம்பாசமுத்திரம்    இரா.ஆவுடையப்பன்7    திருநெல்வேலி    எ.எல்.எஸ்.லட்சுமணன்8    ஆலங்குளம்    பூங்கோதை ஆலடி அருணா9    சங்கரன்கோவில் (தனி)    ராஜா10    ஒட்டப்பிடாரம் (தனி)    எம்.சி.சண்முகய்யா11    திருசெந்தூர்    அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்12    தூத்துக்குடி    பி.கீதாஜீவன்13    விளாத்திகுளம்    ஜி.வி.மார்க்கண்டேயன்14    முதுகுளத்தூர்    ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்15    ராமநாதபுரம்    கா.காதர்பாட்சா முத்துராமலிங்கம்16    பரமக்குடி (தனி)    செ.முருகேசன்17    திருச்சுழி                 தங்கம் ெதன்னரசு18    அருப்புக்கோட்டை    சாத்தூர் ராமச்சந்திரன்19    விருதுநகர்    ஏ.ஆர்.ஆர். சீனிவாசன்20    ராஜபாளையம்    தங்கபாண்டியன்21    கம்பம்    கம்பம் என்.ராமகிருஷ்ணன்22    ேபாடிநாயக்கனூர்    தங்க தமிழ்ச்செல்வன்23    ெபரியகுளம் (தனி)    கே.எஸ்.சரவணகுமார்24    ஆண்டிப்பட்டி    எ.மகராஜன்25    திருமங்கலம்    மு.மணிமாறன்26    மதுரை மேற்கு    சி.சின்னம்மாள்27    மதுரை மத்தி    பழனிவேல் தியாகராஜன்28    மதுரை வடக்கு    கோ.தளபதி29    சோழவந்தான் (தனி)  எ.வெங்கடேசன்30    மதுரை கிழக்கு    பி.மூர்த்தி31    மானாமதுரை (தனி)    ஆ.தமிழரசி32    திருப்பத்தூர்    கே.ஆர். பெரிய கருப்பன்33    ஆலங்குடி                    சிவ.வீ.மெய்யநாதன்34    திருமயம்                    எஸ்.ரகுபதி35    புதுக்கோட்டை    முத்துராஜா36    விராலிமலை    எம்.பழனியப்பன்37    பேராவூரணி    என்.அசோக்குமார்38    பட்டுக்கோட்டை    கா.அண்ணாதுரை39    ஒரத்தநாடு    எம்.ராமச்சந்திரன்40    தஞ்சாவூர்    டி.கே.ஜி. நீலமேகம்41    திருவையாறு    துரை சந்திரசேகரன்42    கும்பகோணம்    க.அன்பழகன்43    திருவிடைமருதூர்(தனி) கோவி. செழியன்44    நன்னிலம்                      எஸ்.ஜோதிராமன்45    திருவாரூர்    பூண்டி கே. கலைவாணன்46    மன்னார்குடி    டி.ஆர்.பி.ராஜா47    வேதாரண்யம்    எஸ்.கே.வேதரத்தினம்48    பூம்புகார்                      நிவேதா எம்.முருகன்49    சீர்காழி(தனி)    மு.பன்னீர்செல்வம்50    புவனகிரி                      துரை கி.சரவணன்51    குறிஞ்சிப்பாடி    எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்52    கடலூர்                      கோ.அய்யப்பன்53    நெய்வேலி    சபா.ராஜேந்திரன்54    திட்டக்குடி(தனி)    சி.வி.கணேசன்55    ஜெயங்கொண்டம்    கே.எஸ்.கே.கண்ணன்56    குன்னம்                      எஸ்.எஸ். சிவ சங்கர்57    பெரம்பலூர் (தனி)    எம்.பிரபாகரன்58    துறையூர் (தனி)    செ.ஸ்டாலின் குமார்59    முசிறி                      ந.தியாகராஜன்60    மணச்சநல்லூர்    சீ.கதிரவன்61    லால்குடி                     சவுந்திரபாண்டியன்62    திருவெறும்பூர்    அன்பில் மகேஷ் பொய்யாமொழி63    திருச்சி கிழக்கு    இனிகோ இருதயராஜ்64    திருச்சி மேற்கு    கே.என். நேரு65    ஸ்ரீரங்கம்                      எம்.பழனியாண்டி66    குளித்தலை    இரா.மாணிக்கம்67    கிருஷ்ணராயபுரம் (தனி)    சிவகாமசுந்தரி68    கரூர்                     வி.செந்தில் பாலாஜி69    அரவக்குறிச்சி    மொஞ்சனூர் ஆர்.இளங்கோ70    வேடசந்தூர்    எஸ்.காந்திராஜன்71    நத்தம்                    எம்.எ.ஆண்டி அம்பலம்72    ஆத்தூர்                   இ.பெரியசாமி73    ஒட்டன்சத்திரம்    அர.சக்கரபாணி74    பழனி                    ஐ.பி.செந்தில் குமார்75    மடத்துக்குளம்    இரா.ெஜயராமகிருஷ்ணன்76    பொள்ளாச்சி    கே.வரதராஜன்77    கிணத்துக்கடவு    குறிச்சி பிரபாகரன்78    சிங்காநல்லூர்    நா.கார்த்திக்79    தொண்டாமுத்தூர்    கார்த்திகேய சிவசேனாபதி80    கோவை வடக்கு    சண்முகசுந்தரம்81    கவுண்டம்பாளையம் பையா (எ) ஆர்.கிருஷ்ணன்82    திருப்பூர் தெற்கு    க.செல்வராஜ்83    மேட்டுப்பாளையம்    டி.ஆர்.சண்முகசுந்தரம்84    கூடலூர்(தனி)    எஸ்.காசிலிங்கம்85    குன்னூர்                     கா.ராமச்சந்திரன்86    கோபிசெட்டிப்பாளையம்    ஜி.வி.மணிமாறன்87    அந்தியூர்    எ.ஜி.வெங்கடாச்சலம்88    பவானி    ேக.பி.துரைராஜ்89    காங்கேயம்    மு.பெ.சாமிநாதன்90    தாராபுரம் (தனி)    கயல்விழி செல்வராஜ்91    மொடக்குறிச்சி    சுப்புலட்சுமி ஜெகதீசன்92    ஈரோடு மேற்கு    சு.முத்துசாமி93    குமாரபாளையம்    எம்.வெங்கடாசலம்94    பரமத்திவேலூர்    கே.எஸ்.மூர்த்தி95    நாமக்கல்    பெ.ராமலிங்கம்96    சேந்தமங்கலம் (பழங்குடி)    கே.பொன்னுசாமி97    ராசிபுரம் (தனி)    மா.மதிவேந்தன்98    வீரபாண்டி    ஆ.கா.தருண்99    ேசலம் ெதற்கு    எ.எஸ்.சரவணன்100    சேலம் வடக்கு    இரா.ராஜேந்திரன்101    சேலம் மேற்கு    சேலத்தாம்பட்டி ராஜேந்திரன்102    சங்ககிரி                      கே.எம்.ராஜேஷ்103    எடப்பாடி                      த.சம்பத் குமார்104    மேட்டூர்    எஸ்.சீனிவாச பெருமாள்105    ஏற்காடு(பழங்குடி)    சி.தமிழ்செல்வன்106    ஆத்தூர்(தனி)    ஜீவா.ஸ்டாலின்107    கெங்கவல்லி (தனி)    ஜெ.ரேகா பிரியதர்சினி108    சங்கராபுரம்    தா.உதயசூரியன்109    ரிஷிவந்தியம்    வசந்தம் கார்த்திக்கேயன்110    உளுந்தூர்பேட்டை    எ.ஜெ.மணிகண்டன்111    திருக்கோவிலூர்    க.பொன்முடி112    விக்கிரவாண்டி    நா.புகழேந்தி113    விழுப்புரம்    ஆர்.லட்சுமணன்114    திண்டிவனம் (தனி)    பி.சீத்தாபதி சொக்கலிங்கம்115    மைலம்                     மாசிலாமணி116    செஞ்சி                    கே.எஸ்.மஸ்தான்117    வந்தவாசி (தனி)    எஸ்.அம்பேத்குமார்118    செய்யாறு                    ஒ.ஜோதி119    ஆரணி                   எஸ்.எஸ்.அன்பழகன்120    போளூர்                  கே.வி.சேகரன்121    கலசப்பாக்கம்    பெ.சு.தி.சரவணன்122    கீழ்பென்னாத்தூர்    கு.பிச்சாண்டி123    திருவண்ணாமலை    ஏ.வ.வேலு124    செங்கம்(தனி)    மு.பெ.கிரி125    பாப்பிரெட்டிபட்டி    எம்.பிரபு ராஜசேகர்126    தருமபுரி                    தடங்கம் பெ.சுப்பிரமணி127    பென்னாகரம்    பி.என்.பி.இன்பசேகரன்128    பாலக்கோடு    பி.கே.முருகன்129    ஓசூர்                   ஒய்.பிரகாஷ்130    வேப்பனஹள்ளி    பி.முருகன்131    கிருஷ்ணகிரி    டி.செங்குட்டுவன்132    பர்கூர்                    தே.மதியழகன்133    திருப்பத்தூர்    எ.நல்லதம்பி134    ஜோலார்பேட்டை    கே.தேவராஜ்135    ஆம்பூர்                    ஆர்.செ.வில்வநாதன்136    குடியாத்தம் (தனி)    வி.அமலு137    கீழ் வைத்தினான்குப்பம் (தனி)  கே.சீத்தாராமன்138    அணைக்கட்டு    ஏ.பி.நந்தகுமார்139    வேலூர்                    ப.கார்த்திகேயன்140    ஆற்காடு                 ஜே.எல்.ஈஸ்வரப்பன்141    ராணிப்பேட்டை    ஆர்.காந்தி142    காட்பாடி              துரைமுருகன்143    காஞ்சிபுரம்    சி.வி.எம்.பி.எழிலரசன்144    உத்திரமேரூர்    க.சுந்தர்145    செங்கல்பட்டு    வரலட்சுமி மதுசூதனன்146    தாம்பரம்                எஸ்.ஆர்.ராஜா147    பல்லாவரம்    இ.கருணாநிதி148    ஆலந்தூர்    தா.மோ.அன்பரசன்149    சோழிங்கநல்லூர்    எஸ்.அரவிந்த் ரமேஷ்150    ஆவடி                     சா.மு.நாசர்151    பூவிருந்தமல்லி(தனி)    ஆ.கிருஷ்ணசாமி152    திருவள்ளூர்    வி.ஜி.ராஜேந்திரன்153    திருத்தணி    எஸ்.சந்திரன்154    கும்மிடிப்பூண்டி    டி.ெஜ.கோவிந்தராஜன்155    திருவொற்றியூர்    கே.பி.சங்கர்156    மாதவரம்                   எஸ்.சுதர்சனம்157    அம்பத்தூர்    ஜோசப் சாமுவேல்158    மதுரவாயல்    காரப்பாக்கம் க.கணபதி159    மயிலாப்பூர்    த.வேலு160    தி.நகர்               ஜெ.கருணாநிதி161    சைதாப்பேட்டை    மா.சுப்பிரமணியன்162    விருகம்பாக்கம்    ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா163    அண்ணாநகர்    எம்.கே.மோகன்164    ஆயிரம் விளக்கு    டாக்டர் நா.எழிலன்165    திருவல்லிக்கேணி-சேப்பாக்கம்    உதயநிதி ஸ்டாலின்166    துறைமுகம்    பி.கே.சேகர்பாபு167    ராயபுரம்    ஐட்ரீம் இரா.மூர்த்தி168    எழும்பூர் (தனி)    இ.பரந்தாமன்169    திரு.வி.க.நகர்(தனி)    தாயகம் கவி170    வில்லிவாக்கம்    அ.வெற்றி அழகன்171    பெரம்பூர்                    ஆர்.டி.சேகர்172    ஆர்.கே.நகர்    ஜே.ஜே.எபினேசர்173    கொளத்தூர்    மு.க.ஸ்டாலின்தொண்டர்கள் குவிந்தனர்திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். வேட்பாளர் யார் என்பதை அறிவதற்காக காலை 9 மணி முதல் அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தொண்டர்கள் குவிய தொடங்கினர். நேரம் ஆக, ஆக தொண்டர்களின் கூட்டம் நிரம்பி வழியத் தொடங்கியது. எங்கு பார்த்தாலும் தொண்டர்களாக காட்சியளித்தனர். காலை 11.30 மணியளவில் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வந்தார். அப்போது அங்கு குவிந்திருந்த தொண்டர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்க, மு.க.ஸ்டாலின் வாழ்க என்று முழக்கம் எழுப்பினர்….

You may also like

Leave a Comment

16 + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi